வறுமையின் பிடியில் வாழ்க்கை

????????????????????????????????????

வீடு வாசலின்றி கண்ணீர் குடும்பம்!

பட்டர்வொர்த்-

அப்பா இறந்து விட்டர், கணவரும் இறந்து விட்டார், வீடு வாசல் இல்லாத நிலையில் உறவினர் வீட்டில் ஒண்டுக் குடித்தன நடத்துவதுடன், உடல் பேறு குறைந்த மகனை வைத்துக்கொண்டு, எந்த வருமானமும் இன்றி கண்ணீரில் ஒரு பெண்  தவிக்கிறார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் தனது கணவர் இராமு த/பெ இராமசாமி (வயது 46) எதிர்பாராத வகையில் இறந்து விட்டார், அவர் இறந்த நொடி முதல் நாங்கள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டோம். இதற்கு முன் தன் தந்தை கிருஷ்ணனும் இறந்து விட்டார்.

தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து மருத்து எடுத்து வருகிறேன். என் இளைய மகன் லோகேந்திரன் த/பெ இராமு ( வயது 11 ) முற்றிலும் மூளை வளர்ச்சி குன்றியவர். என் மூத்த மகன் சந்தோஷ் த/பெ இராமு ( வயது 13 ) மாக் மண்டின் இடைநிலைப் பள்ளியில் ஒன்றாம் படிவம் பயின்று வருகிறார் என்று வசந்தி த/பெ கிருஷ்ணன் (வயது 42) கண்ணீர் கதையை மக்கள் ஓசையிடம் விவரித்தார்.

இப்படியான கடுமையான சூழ்நிலையில் தமக்கு உறவினர் வீட்டில் ஆதரவு தேடி தற்சமயம் ஒட்டு குடுத்தனத்தில் இருக்கிறேன், அவர்களுக்கும் வீடு தேவைப்படுவதால், தொடர்ந்து நான் அந்த வீட்டில் தங்க வாய்ப்பு இல்லை என்பதால், எனக்கு யாராவது அவசரமாக ஒரு வீடு பார்த்து கொடுக்கவும், எங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவிடவும் கருணை காட்டுங்கள் என்று வசந்தி கிருஷ்ணன் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

தனக்கு வேலை கிடையாது, படுத்த படுக்கையில் உள்ள உடல் பேறு குறைந்த மகனை அருகிலிருந்து பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை, என் இளைய மகனுக்குக் உடல் பேறு குறைந்தவர்களுக்குக் கிடைக்கும், சமூகநல இயக்கத்தின் உதவித் தொகையை வைத்துக்கொண்டு, கால் வயிறு, அரை வயிறு என்று வாழ்ந்து வருகிறோம் என்று வசந்தி தனது சோகத்தை விவரித்தார்.

வீட்டில் சம்பாதிக்கக்கூடிய அளவிற்கு யாரும் இல்லை என்ற சூழலில், எங்களைப் பாதுகாக்க யாரும் இல்லாத நிலையில் நாங்கள் எங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்று வசந்தி கூறினார். எங்கள் வாழ்வாதாரத்திற்கும், என் மகனின் மருத்துவத்திற்கும் உதவிட விரும்பும் கருணை உள்ளங்கள் K.Vasanthy A/P Krishnan CIMB bank  7068458894 என்ற வங்கி கணக்கில் தங்களின் உதவியை வழங்குங்கள் என்று கண்ணீரோடு வசந்தி கேட்டுக்கொண்டார். தொடர்புக்கு 010-4651385 .

-செ.குணாளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here