சிங்கப்பூர் பிரதமரின் மக்கள் நேயம்!
பிரச்சினைகள் நெருக்கடிகள் காலத்தில் மக்களுடன் நெருங்கிய தொடர்பு மிக அவசியமாகிறது. போலித்திரிபுகள் இல்லாமல் அரசின் திட்டங்கள் என்ன? அவற்றை எவ்வாறு அடைவது என்பதற்கெல்லாம் முழுமையான விளக்கங்கள் மக்களிடம் போய்ச்சேர, சென்றடைய சுலபமான வழி எது?
சிங்கப்பூர்-
கொரோனா பரவல் குறித்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றுகிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங். அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், கடந்த இரண்டு வாரங்களாக கொரோனாவின் புதிய சமூக பரவலின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். என்று அவர் தொரிவித்துள்ளார்.
வீட்டிலேயே தங்கி வழிகாட்டுதல்களைப் பின்பற்றிய பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளோம் என்பதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
கொரோனா மருத்துவ பரிசோதனை, தொற்று தொடர்பைக் கண்டறிதல் , தடுப்பூசி செலுத்துவது , இவை அனைத்தும் விரைவாகவும், வேகமாகவும் செயல்படுத்துவதன் மூலம் தீர்வு காணலாம்.
எனது உரையை எனது பேஸ்புக் பக்கம், தொலைக்காட்சி அலைவரிங்யைில் நேரலையாகப் பாருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் பிரதமரின் உரையை யூடியூப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் நேரலையில் பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது