முடிவுக்கு வருகிறதா நெதன்யாகுவின் சகாப்தம்

கட்டம் கட்டும்   எதிர்க்கட்சிகள்!

இஸ்ரேலில் (Isreal) தற்போது அரசியல் குழப்பம் நிலவுகிறது, இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு முறை தேர்தல்கள் நடைபெற்ற போதிலும் தெளிவான பெரும்பான்மை முடிவுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போதும் ஏற்படும் அடுத்த அடுத்த நிகழ்வுகளால், பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) பதவி பறிபோகலாம்.

இஸ்ரேல்-ஹமாஸ் (Israel – Hamas) இடையிலான மோதல்கள் தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்று வந்த நிலையில், அது மூன்றாம் உலகப்போராக உருவெடுக்குமே என்ற அச்சம் உலகில் நிலவியது.

இந்நிலையில், உலகிற்கு ஒரு நிம்மதி அளிக்கும் செய்தியாக, வெள்ளிக்கிழமை (மே 21, 2021), இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர்  நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால், இப்போது அரசியல் போராட்டம் தொடங்கி விட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவியிலிருந்து அகற்ற எதிர்கட்சிகள் கை கோக்க தயாராகிவிட்டன. அதனால் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது

பிரதான எதிர் கட்சியான யாஷ் ஆடிட் கட்சியின் தலைவரான லாப்பிட் ஒரு மதச்சார்பற்ற மையவாதி. அவர் வலதுசாரி தேசியவாதி நப்தலி பென்னட்டுடன் (Naftali Bennet) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருவருக்கும் இடையில் கருத்தியல் வேறுபாடுகள் உள்ள போதிலும், இருவரும் கூட்டணி அமைக்க முன் வந்துள்ளதை அடுத்து லாப்பிட் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகரித்தன. அதில் இருவருமே பிரதமராக மாறி மாறி பதவியில் இருப்பார்கள் என ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

எனினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவியிலிருந்து அகற்ற ஒரு மாறுபட்ட கூட்டணியைக் ஏற்படுத்துவதற்கு பல தடைகள் உள்ளன என்று இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் யெய்ர் லாப்பிட் (Yair Lapid) திங்களன்று தெரிவித்தார்.

மிக நீண்ட காலம் பதிவியில் இருக்கும் நெதன்யாகுவை பதவியிலிருந்து இறக்குவது அத்தனை எளிதல்ல எனவும் கூறப்படுகிறது.

இஸ்ரேலின் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற, நெதன்யாகுவை எதிர்க்கும் கூட்டணிக்கு 61 இடங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.

இது சாத்திய மானதாமானதாக இல்லை. ஆனாலும் அரசியலில் ஏதும் நடக்கலாம் அல்லவா? … ஊம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here