2021 க்கான வரவு செலவு திட்டத்தில் e-Belia திட்டத்தின் கீழ் இளையோருக்கான கொடுப்பனவு (e-wallet) 150 ரிங்கிட் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இன்று இணையம் வழி e-Belia திட்டத்தை தொடக்கி வைத்த போது, புதிதாக அறிவிக்கப்பட்ட pemerkasa உதவி திட்டத்தின் கீழ் 300 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் இதன் வழி இளையவர்கள் 150 ரிங்கிட் உதவித்தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இதனூடாக 20 லட்சம் மலேசியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் அவர் கூறினார்.