DXN – European Wellness புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரீத்தனா, தியாகு

சைபர்ஜெயா:

DXN Holdings Berhad – European Wellness ஆகிய இரண்டு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி கையொப்பமிட்டது. இயற்கையான மேலும் மனித ஆரோக்கியத்திற்கான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து, தயாரித்து உலகச் சந்தைப்படுத்துவதில் அனைத்துலக புகழ்பெற்ற நிறுவனமாக DXN விளங்குகிறது.

தன்னுடைய அடுத்த கட்ட முயற்சியாக உலகப் புகழ்பெற்ற European Wellness நிறுவனத்துடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் வழி இரு தரப்பு ஆளுமைகளையும் ஒன்றிணைத்து விரிவான, ஓர் ஆரோக்கிய மையத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன.

அந்தந்த நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் பங்காளித்துவத்தோடு இயற்கை உணவு மருத்துவத்தன்மை கொண்ட தாயரிப்புகள் ஆகியவற்றில் இன்னும் விரிவான ஆராய்ச்சியையும் மேம்பாட்டையும் கொண்டு வருவதற்கு இந்த இரண்டு நிறுவனங்களும் உறுதி அளித்திருக்கின்றன.

ஜெர்மனியின் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம்,மலேசியப் பல்கலைக்கழகங்கள் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.

காளானில் இருந்து இயற்கை உணவுகளையும் உடல் ஆரோக்கிய பானங்களையும் தயாரிப்பதில் முன்னோடியாக DXN விளங்கி வருகிறது. அதன் தயாரிப்புப் பொருட்கள் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்று DXN நிறுவனர், நிர்வாகத் தலைவர்  டத்தோ லிம் சியோ ஜின்,யூரோப்பியன் வெல்னஸ் நிறுவனர் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் மைக் சான் ஆகிய இருவரு‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here