புவி வெப்பமடைதல் காரணமாக பனிப்பாறைகள் சிதைவு

 20 ஆண்டுகளில் ஐஸ்லாந்து நாட்டில்

ஏற்பட்ட இழப்பு !

புவி வெப்பமடைதல் காரணமாகமில்லினியம் தொடங்கியதிலிருந்து ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் சுமார் 750 சதுர கி.மீ. (290 சதுர மைல்) அல்லது அவற்றின் மேற்பரப்பில் ஏழு சதவிகிதத்தை இழந்துள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐஸ்லாந்து நாட்டின் நிலப்பரப்பில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை உள்ளடக்கிய பனிப்பாறைகள் 2019-ஆம் ஆண்டில் 10,400 சதுர கிலோமீட்டராக சுருங்கிவிட்டதாக ஐஸ்லாந்தின் அறிவியல் இதழான ஜோகுல் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

1890 முதல், பனிப்பாறைகளால் சூழப்பட்ட நிலம் கிட்டத்தட்ட 2,200 சதுர கிலோமீட்டர் அல்லது 18 சதவீதம் குறைந்துள்ளது.

பனிப்பாறைகளின் இந்த குறைவு சதவீதம் கடந்த 20 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக இருப்பதாக பனிப்பாறை வல்லுநர்கள், புவியியலாளர்கள், புவி இயற்பியலாளர்களின் சமீபத்திய கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

மேலும், 2200- ஆம் ஆண்டுக்குள் ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் முற்றிலுமாக மறைந்து போகும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.

ஐஸ்லாந்து நாட்டின் 3 ஆவது பெரிய பனிப்பாறை 810 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஹோஃப்ஸ்ஜோகுல் பனிப்பாறை ஆகும். கடந்த 20 ஆண்டுகளில் பனியின் இழப்பு ஏறக்குறைய இந்த பனிப்பாறைக்கு சமமானஅளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here