விஷால் தயாரிப்பில் துப்பறிவாளன் 2

– இளையராஜாவிடம் காண்பிக்க     விருப்பம் !

துப்பறிவாளன் 2 படத்தை இளையராஜாவிடம் காண்பிக்க விருப்பப்படுவதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது.

படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் – விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டது. இதனால் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இதையடுத்து படத்தைத் தானே இயக்க முடிவெடுத்தார் விஷால். இளையராஜா இசையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குகிறார்.

இந்நிலையில் இளையராஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விஷால் கூறியதாவது:

மேஸ்ட்ரோ இளையராஜாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். கடவுள் உங்களுக்கு நல்ல உடல்நலத்தை அளிக்க வேண்டும். பலநாள் கனவாக உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளேன்.

ஊரடங்குக்குப் பிறகு படப்பிடிப்பை முடித்துவிட்டு, துப்பறிவாளன் 2 படத்தை உங்களுக்குக் காண்பிக்கக் காத்திருக்கிறேன். இன்னும் அற்புதமான பாடல்களை நீங்கள் எங்களுக்குத் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here