இந்தியப் பிரதமர் மோடியுடன் கமலா ஹாரீஸ் பேச்சு –

தடுப்பூசி பற்றாக்குறை  பகிர்வுத் திட்டம்!

வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா சென்று திரும்பிய நிலையில் இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக ஜோ பைடன் நிர்வாகம் அறிவிக்க, துணை அதிபர் கமலா ஹாரீஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து பேசியுள்ளார்.

அதில் அமெரிக்காவின் உலகளாவிய தடுப்பூசி பகிர்வுத் திட்டத்தில் இந்தியாவிற்கும் தடுப்பூசிகளை வழங்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

கோவாக்ஸ் வழியே முதலில் இந்தியாவுக்கு 2 முதல் 3 மில்லியன் டோஸ்களை வழங்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இது இந்தியாவுக்கு ஒரு நாள் டோஸ் – வியாழக்கிழமை, நாடு 2.62 மில்லியன் டோஸை நிர்வகித்தது என்று ஒரு தற்காலிக அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. இவர்களில் 24,04,166 முதல் டோஸ் பயனாளிகள் மற்றும் 220,805 இரண்டாவது டோஸ் பயனாளிகள் ஆவார்கள்.

கூடுதலாக 80 மில்லியன் தடுப்பூசிகளை வைத்திருக்கும் அமெரிக்கா உலக நாடுகளுக்கு ஜூன் இறுதிக்குள் அந்த தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 25 மில்லியன் கோவிட் தடுப்பூசிகளை வழங்க உள்ளது என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

75% தடுப்பூசிகள் கோவாக்ஸ் மூலமாக வழங்கப்படும். அதில் 6 மில்லியன் டோஸ்கள் லத்தீன் அமெரிக்காவிற்கும், கரீபியன் தீவுகளுக்கும், 7 மில்லியன் டோஸ்கள் தெற்கு, தென்கிழக்கு ஆசியாவிற்கும், 5 மில்லியன் தடுப்பூசிகள் ஆப்பிரிக்காவிற்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 6 மில்லியன் டோஸ்கள், தற்போது அதிக கொரோனா தொற்றை சந்தித்து வரும் நாடுகளுக்கும், கூட்டுறவு நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும் வழங்கப்படும். இந்த பட்டியலில் கனடா, மெக்ஸிகோ, இந்தியா , கொரியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here