தடுப்புக் காவலில் இருந்த இந்திய ஆடவர் மரணம்; இது தொடர்கதையாகுமா?

பெட்டாலிங் ஜெயா: தென் கிளாங் போலீஸ் தலைமையகத்தில் 36 வயது கைதி போலீஸ் காவலில் இறந்துள்ளார். திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்பாக கைதி உமர் ஃபாரூக் அப்துல்லா @ ஹேமநாதன் புதன்கிழமை (ஜூன் 2) கைது செய்யப்பட்டு அவர் தடுப்புக்காவல் வைக்கப்பட்டிருந்தார்.

வழக்கறிஞர் எம்.மனோகரன் கூறுகையில், உமர் ஃபாரூக்கின் மனைவி ஹுமிரா அப்துல்லா வியாழக்கிழமை காலை அவருக்கு உணவு கொண்டு வர போலீஸ் தலைமையகத்திற்கு சென்றுள்ளார். அவர் போலீஸ் தலைமையகத்தில் காத்திருந்தார், ஆனால் பின்னர் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவரது கணவர்  ஒரு போலீஸ்காரர்  தனது கணவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது என்று அவர் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் அரசு மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக மனோகரன் மேலும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர்  டத்தோ அர்ஜுனைடி முகமது இன்று (ஜூன் 4) பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரணம் அடைந்த ஆடவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் இருப்பதாக தகவல் வழி அறியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here