மலாக்கா( ஜூன் 5) : தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட பெத்தா (betta) வைரஸ் திரிபு மலாக்காவில் இனங்காணப்பட்டுள்ளது என்ற செய்தி பொய்யானது என்று மலாக்கா முதன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சுலைமான் முகமட் அலி இன்று (ஜுன் 5) நடைபெற்ற நேர்காணலின் போது தெரிவித்தார்.
பெத்தா மாறுபட்ட வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என்று நம்பப்படும் நபர், மே மாதத்தின் தொடக்கத்திலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று , குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் தற்போது அந்த நபர் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் உள்ளூர் வாசிகள் இத் தகவல் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தாமான் மலாக்கா ராயாவிலுள்ள பொழுதுபோக்கு மையத்தில் பெத்தா வைரஸ் தொற்று முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்ற போலிச் செய்திக்குப் பின்னர் தாமான் மலாக்கா ராயா மற்றும் கோத்தா டாமான்சாரா பகுதி வட்டார மக்கள் அப்பகுதியிலுள்ள உணவகங்களில் உணவுகளை வாங்குவதற்கு மிகவும் பயப்படுகின்றனர் என்றும் அதன் காரணமாக இவ்வுணவகங்களின் விற்பனை 60 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.