19ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வயது சிறுமி மூச்சுத் திணறி மரணம்

ஜார்ஜ் டவுன்:  ஜாலான் ஓ லியன் ஃதே பகுதியின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வயது சிறுமி புகை மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார். இன்று (ஜூன் 5) காலை 9 ஒரு உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம், இறந்தவரின் பெற்றோர் தங்கள் ஒரு வயது மகனுடன் பொருட்கள் வாங்கச் சென்றபோது நடந்தது.

மற்ற குடியிருப்பாளர்களால் தீயில் இருந்து வெளியேற்றப்பட்ட சிறுமி பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் ஒரு மணி நேரம் கழித்து இறந்தார்.

ஜார்ஜ் டவுன் OCPD உதவி ஆணையர் சோஃபியன் சாண்டோங் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் காலை 9.40 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். “இறப்புக்கான காரணம் புகை உள்ளிழுப்பதே” என்று அவர் கூறினார்.

ஜாலான் பேராக் மற்றும் லேபோ பந்தாய் ஆகிய இடத்திலிருந்து ஐந்து தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்குள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என்று அவர் கூறினார்.

ஆரம்ப விசாரணையில், பெற்றோர் ஒரு வயது ஆண் குழந்தையுடன் அத்திவாசியப் பொருட்கள் வாங்க வீட்டை விட்டு சென்றிருக்கின்றனர். ஆறு வயது மற்றும்  நான்கு வயது சிறுமிகள்  சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் இருந்ததாக   என்று ஏசிபி சோபியன் கூறினார்.நான்கு வயது குழந்தை பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

19 ஆவது மாடியில் ஏற்பட்ட தீயில் சுமார் 80%  அழிந்து விட்டது. இருப்பினும், இந்த சம்பவத்தில் வேறு எந்த கட்டடமும் (பிளாக்) பாதிக்கப்படவில்லை.பலியானவர் மூன்று உடன்பிறப்புகளில் மூத்தவராவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here