அனுமதிக்கப்பட்ட தொகையை தாண்டி பயணிகளை ஏற்றினர்; 7 பயணிகள் படகுகள் எச்சரிக்கையுடன் தடுத்து வைப்பு

புலாவ் பெர்ஹந்தியான்,

மலேசிய கடல் அமலாக்க பிரிவின் (MMEA) திரெங்கானு கிளை, அனுமதிக்கப்பட்ட தொகையை தாண்டி பயணிகளை ஏற்றியதை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 7 படகுகளை தடுத்து வைத்துள்ளது.

அதிகாரிகளின் திடீர் சுற்றிவளைப்பின்போது ஒரு படகில் 42 பயணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இது அனைவரது உயிருக்கும் ஆபத்தாக இருந்தது, இது சிறிய குற்றமல்ல, மரணத்திற்கும் வழிவகுக்கும் அலட்சியம் எனவும் தெரிவித்தார் என திரெங்கானு MMEA இயக்குனர் ஹமிலுடின் கூறினார்.

மேலு படகுகளில் பயணிகள் பட்டியல் இல்லாதது, படகு ஓட்டுனரின் பெயர், அனுமதி ஆவணத்தில் இல்லாதது, மற்றும் காலாவதியான உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 14 படகு ஊழியர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 28 அன்று புலாவ் பெர்ஹந்தியான் அருகே படகு கவிழ்ந்து, இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பான கப்பல்களில் பயணிக்க வேண்டும் என பொதுமக்கள் அடிக்கடி எச்சரிக்கப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here