கொழும்பு:
வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 2 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் வௌியிட்ட அறிவிப்பில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
மேலும் கனமழை, கடும் காற்று காரணமாக கொழும்பு செல்லும் ஆறு விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. கனமழை வௌ்ளத்தால் சுமார் 23 மாவட்டங்களில் 99,876 குடும்பங்களைச் சேர்ந்த 335,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.




















