கர்நாடக அரசு கொடியின் கலர், டிசைனில் பிகினி ஆடைகளா!

-அமேஸான் கிளப்பிய புதிய சர்ச்சை!

அமேஸான் விற்பனையில் கர்நாடகா அரசு கொடியை வைத்து புதிய ரக பிகினி ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அமேஸானின் இணையத்தளத்தில் இது போன்ற ஆடைகள் விற்பனைக்கு வந்திருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

அமேஸான் கனடா இணையத்தளம் இந்த நீச்சல் ஆடைகளை விற்பனைக்கு விட்டுள்ளது. கனடா மட்டுமல்லாது ஜப்பான், இங்கிலாந்து , மெக்சிக்கோ போன்ற நாடுகளிலும் அமேஸானில் இந்த ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நீச்சல் ஆடைகள் கர்நாடகா அரசு கொடி டிசைனில் வடிவமைக்கப்பட்டு, கலரும் அதே நிறத்தில் இருக்கிறது. இது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமேஸானின் இந்த ஆடைகள் விற்பனைக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அமேஸானை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கர்நாடகா ரக்‌ஷனா வேதிகாவை சேர்ந்த பிரவீன் ஷெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பெங்களூரில் போராட்டத்திலும் ஈடுபட்டார். போராட்டத்தின் போது அவர் அளித்த பேட்டியில், “கர்நாடகா கொடி பல கோடி கன்னட மக்களின் பிணைப்பாக இருக்கிறது. உலகம் முழுவதும் வாழும் கன்னட மக்களின் உணர்வுகளை அமேஸான் அவமதித்துவிட்டது என்று தெரிவித்தார்.

இதே போன்று பாஜக அமைச்சர் அர்விந்த் டிவிட்டரில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கூகுள் சமீபத்தில் கன்னட மக்களை அவமதித்தது. அந்த வடு இன்னும் மறைவதற்குள் அமேஸான் கன்னட கொடியின் கலர்  டிசைனில் பெண்களுக்கான நீச்சல் உடைகளை விற்பனை செய்து வருகிறது.

பன்னாட்டுக் கம்பெனிகள் இது போன்று கன்னடர்களை அவமதிப்பதை நிறுத்தவேண்டும். இது போன்ற அவமதிப்புக்களை நாங்கள் பொறுத்துக்கொள்ளமாட்டோம். அமேஸான் நிறுவனம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்வோம்.

கர்நாடகா மக்களிடம் அமேஸான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பலரும் அமேஸானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமேஸான் இந்தியா இது தொடர்பாக இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here