ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம்

 கடுமையாகக்  குறைந்துவருகிறதாம்!

டோக்கியோ:

இன்றைய சூழலில் பிறப்பு விகிதம் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு  நேரெதிராக இருப்பதுதான் கவலையளிப்பதாக ஜப்பான் கூறுகிறது. 

இதுவரை இல்லாத வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஜப்பானில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கடுமையாகக் குறைந்துள்ளது. ஜப்பானியர்கள் கொரோவால் மன உளைச்சளில் இருப்பதுபோலவே தெரிகிறது.  

பலரும், பெருந்தொற்று காலம் என்பதால் தங்களது திருமணங்களை தள்ளிப் போட்டதும், குழந்தை பெற்றுக் கொள்வதை திருமணமான தம்பதிகள் தள்ளிப் போடுவதுமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஜப்பான், ஏற்கனவே மக்கள் தொகை வளர்ச்சியில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது குழந்தை பிறப்பு விகிதம் கடுமையாகச் சரிவடைந்திருப்பது, நாட்டில் வயதானவர்களின் விகிதம் அதிகரிப்பதும், வேலை செய்யும் மனித வளம் குறைவதும் அடுத்து வரும் ஆண்டுகளில் ஜப்பான் சந்திக்க வேண்டியது இருக்கும்.

ஜப்பானில், கடந்த 2020-ஆம் ஆண்டில் 8,40,832 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2.8 சதவீதம் குறைவாகும். இது கடந்த 1899ஆம் ஆண்டுக்குப் பின் பதிவாகும் மிகக் குறைவான குழந்தைப் பிறப்பு என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here