ஊழியர்களுக்கு 300 விழுக்காடு சம்பள உயர்வை அறிவித்தது கூகுள்

கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு திடீரென்று 300 சதவிகிதம் ஊதியத்தை உயர்த்தி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்குக் காரணம் அதன் ஊழியர்கள் வெளியேறாமல் தக்க வைக்க வேண்டும் என்பதுதான் .

அமெரிக்காவைச் சேர்ந்த AI ஸ்டார்ட்அப் Perplexity நிறுவனம் இப்போது கூகுள் ஊழியர்களை நல்ல சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்த தயாராக உள்ளது. Perplexity-யின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தியாவில் பிறந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ். இவர் சென்னை ஐ.ஐ.டி யில் பட்டம் பெற்றவர்.

அரவிந்த் தனது பெர்பெக்சிட்டி AI நிறுவனத்துக்காக கூகுளின் திறமையான பணியாளர்களை மிக அதிக ஊதியத்தில் வேலைக்கு அமர்த்த தயாராக உள்ளார். இதற்காக சில கூகுள் ஊழியர்களை தொடர்பு கொண்டு நேர்காணல் நடத்தி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கு கூகுளை விட சிறந்த ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பெர்பெக்சிட்டி AI ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் ஸ்ரீனிவாஸ், தங்கள் ஊழியர்களை தொடர்பு கொண்டு ஆஃபர் லெட்டர் கொடுத்த ஊழியர்களின் தகவலை கூகுள் அறிந்துள்ளது. அதையடுத்து தனது திறமையான ஊழியர்களை இழக்க விரும்பாத கூகுள் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு 300 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி அதிரடியாக அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிக் கொண்டிருக்கும் நிலையில், கூகுளின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்த ஊழியர்கள் கூகுளை விட்டுச் செல்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.

அரவிந்த் ஸ்ரீனிவாஸ், “நாங்கள் தொடர்பு கொண்ட மற்றும் நேர்காணல் செய்த ஊழியர்களுக்கு ஆபர் லெட்டர் வழங்கப்பட்டுள்ளன. அந்த ஊழியர்கள் நோட்டீஸ் பீரியட், ரிலீவிங் லெட்டர் உள்ளிட்ட சில செயல்முறைகளை முடித்துவிட்டு நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் பெர்பெக்சிட்டியின் சலுகையால் கூகுள் இப்போது விழித்துக் கொண்டுள்ளது. கற்பனை செய்ய முடியாத சம்பள உயர்வை வழங்குகிறது. இதனால் ஊழியர்கள் வரத் தயங்குகிறார்கள்” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here