32 வகையாக திரிபடைந்த கொரோனா வைரஸ்.

தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவில் எயிட்ஸ் (HIV) நோயால் பாதிக்கப்பட்ட பெண் கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளார். அப் பெண்ணின் உடலில் கோவிட் -19 வைரஸ் 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஆராட்சியாளர்கள் கூறியதாவது,தென்னாப்பிரிக்காவில் HIV தொற்றினால் மிகக் கடுமையான பாதிக்கப்பட்ட 36 வயதுப் பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது.

2006-ஆம் ஆண்டு முதல் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்கு உடலில் நோய் எதிா்ப்பாற்றல் மிகவும் குறைவாகக் காணப்பட்டது.

இந்தச் சூழலில், 216 நாள்களாக அவரது உடலில் கொரோனா வைரஸ் 32 வகைகளாக உருமாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா வகைகளும் அடங்கும் என்று ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here