கோலாலம்பூர்:
அடுத்த மாதம் வரும் 10ஆம் தேதி பெட்டாலிங், உலுலங்காட், கோலாலம்பூர் ஆகிய 339 பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என ஆயிர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
பெட்டாலிங் மாவட்டத்தில் 37 பகுதிகளிலும் உலுலங்காட் மாவட்டத்தில் 98 பகுதிகளிலும் கோலாலம்பூர் பகுதிகளில் 204 பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை ஏற்படும் என நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது கூறியது.
சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் இந்த நீர் விநியோகத் தடை ஏற்படும் எனவும் அந்த அறிக்கை கூறியது.
அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த நீர் விநியோகத் தடை இரவு 7 மணிக்கு வழக்க நிலைக்குத் திரும்பும் எனவும் அது கூறியது. இம்மாதம் 12ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் நீர் விநியோகம் சீரான நிலைக்குத் திரும்பும் எனவும் அது கூறியது.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு லோரிகள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அது கூறியது.

வர்த்தக மையங்கள் ஆயிர் சிலாங்கூர் வாடிக்கையாளர் ஙே்வை முகப்புகளில் நீரை வாங்கிக் கொள்ளலாம்.
சன்வே பத்துகேவ்ஸ். செலாயாங் முத்தியாரா பகுதிகளிலுள்ள நீர் நிரப்பும் இடங்களில் லோரி மூலம்தண்ணீரை பெற்றுக் கொள்ளலாம்.
நீர் விநியோகத் தடை குறித்து பொதுமக்கள் ஆயிர் சிலாங்கூரின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் ஆகிய செயலிகள் உட்பட 15300 என்ற தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கை கூறியது.




















