5 வயது சிறுமியை சீரழித்த குற்றச்சாட்டில், நாகினி 3 சீரியல் நடிகர் கைது!

மும்பை : பிரபல தொலைக்காட்சி தொடரான நாகினி 3 நடிகரான பேல் வி பூரி சிறுமியை சீரழித்த குற்றத்திற்காக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதாகும் இவர் மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடன் நடிக்கும் சக நடிகை ஒருவர் சம்பவ தினத்தன்று தனது 5 வயது மகளுடன் படப்பிடிப்பு தளத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது குறித்த நடிகர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தந்தை அண்மையில் மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், நடிகர் பேல் வி பூரி கைதுசெய்யப்பட்டார்.

மேலும் இச் சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்தது என்றும் சிறுமியின் தந்தை தெரிவித்தார்.

இந்த தகவலால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here