இந்தியா: இந்தியாவின், புனேயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரசாயணத் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.45 ஏற்பட்டுள்ளதுடன், தீ விபத்து ஏற்படும் போது சுமார் 37 தொழிலாளர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
தீ பரவலின் பின்னர் போலிஸாரும், தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் பணிகளையும் மீட்பு நடவடிக்கையினையும் முன்னெடுத்தனர்.
தொழிற்சாலையில் குளோரின் டை ஆக்சைட் பயன்படுத்திய விதத்தில் தவறு நேர்ந்து, விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும் தீ விபத்துக்கான உறுதியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந் நிலையில் இந்த பயங்கர தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.