நோய் எதிர்ப்பு சக்தியில் கோவேக்சினை மிஞ்சிய கோவிஷீல்டு
இந்தநிலையில், எந்த தடுப்பூசியால், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பொருள் (ஆன்டிபாடி) அதிகமாக உற்பத்தி ஆகிறது என்பது பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது.
13 மாநிலங்களின் 22 நகரங்களைச் சேர்ந்த 515 சுகாதார பணியாளர்களைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 210 போ் பெண்கள். 425 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி 2 தவணையும், 90 பேர் கோவேக்சின் தடுப்பூசி 2 தவணையும் போட்டுக்கொண்டனர்.
நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கணக்கிட அவர்களது ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், கோவிஷீல்டு போட்டுக்கொண்டவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு, மி.லி.க்கு 127 ஏ.யு. என்ற அளவிலும், கோவேக்சின் போட்டுக்கொண்டவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி அளவு, மி.லி.க்கு 53 ஏ.யு. என்ற அளவிலும் இருந்தன.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தி விகிதம் கோவிஷீல்டு தடுப்பூசியில் 98.1 சதவீதமும், கோவேக்சின் தடுப்பூசியில் 80 சதவீதமும் காணப்பட்டது.
முதல் தவணை தடுப்பூசி போடுவதற்கு 6 வாரங்களுக்கு முன்பு கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மற்றவர்களை விட 100 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது.









