இனி 4 பெருங்கடல் அல்ல.. 5.. அன்டார்டிகாவின் தெற்கு பெருங்கடலை அங்கீகரித்தது.. நேஷனல் ஜியோகிராபிக்

இதுவரை உலகில் 4 பெருங்கடல்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு இருந்த நிலையில்… 5ஆவதாக ஒரு பெருங்கடல் தற்போது நேஷனல் ஜியோகிராபிக் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது அன்டார்டிகாவை சுற்றி இருக்கும் தெற்கு பெருங்கடல்.

அன்டார்டிகாவை சுற்றி இருக்கும் தெற்கு பெருங்கடல் உலகிலேயே மிகவும் அழகான தூய்மையான கடல் பகுதியாகும். அன்டார்டிகாவை சுற்றி பசிபிக் கடல், இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் கடல் மூன்றையும் தொட்டபடி இந்த தெற்கு கடல் அமைந்து இருக்கிறது.

அன்டார்டிகாவை சுற்றி இது அமைந்து உள்ள நிலையில்… தெற்கு கடல் வெறும் பனி படலமா, அல்லது பசிபிக், இந்திய பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் கடலின் நீட்சியாக இருக்குமோ என்று விவாதங்கள் நடந்து கொண்டி இருந்தது. இந்த நிலையில்தான் நேஷனல் ஜியோகிராபிக் தெற்கு பெருங்கடலை தனி பெரும் கடலாக அறிவித்துள்ளது.

நேஷனல் ஜியோகிராபிக்

நேஷனல் ஜியோகிராபிக் மூலம் இதுவரை பசிபிக் கடல், ஆர்டிக் கடல், அட்லான்டிக் கடல், இந்திய பெருங்கடல் ஆகிய நான்கு பெருங்கடல் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட நிலையில் தற்போது 5வதாக தெற்கு பெருங்கடல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக சூழலியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், கடல் வல்லுநர்கள் இடையே இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

எப்படி

நேஷனல் ஜியோகிராபிக் இதை அங்கீகரிக்கும் முன்பே பல்வேறு செய்திகளில், கட்டுரைகளில் தெற்கு பெருங்கடல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த கடலை அங்கீகரிக்கும் முடிவில் நேஷனல் ஜியோகிராபிக் இருந்த நிலையில், தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த தெற்கு பெருங்கடல் அண்டார்டிகாவை சுற்றி 60 டிகிரி தெற்கு அட்ச ரேகையை எல்லையாக கொண்டு அமைந்து உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here