விலங்குகளை பிடிக்க வீட்டில் தயார் செய்த வெடிப்பொருள் வினையானது

சிபு: மெரடோங் மாவட்டத்தில், விலங்குகளை பிடிக்க வீட்டில் தயார் செய்த  வெடிப்பொருளை கொண்டு சென்றபோது வெடித்ததில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்ததோடு மற்றும் அவருடன் பயணம் செய்தவர் பலத்த காயம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாவட்டத்தின் ஜாலான் சுங்கை பாஃடியில்  உள்ள ஒரு நீண்ட வீட்டு வரிசை அருகே லாரன்ஸ் லுஜாங், 23, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், அவருடன் பயணம் செய்த சிங் லம்பா 53, என அடையாளம் காணப்பட்டார். உடன் பயணித்தவர் கால்களில் பலத்த காயமடைந்து  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மெரடோங் காவல்துறைத் தலைவர் சேகம் அனோய் தெரிவித்தார்.

இந்த வழக்கு வெடிபொருள் சட்டம் 1957 இன் பிரிவு 5 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பெறப்பட்ட முதற்கட்ட தகவல்களில், இருவரால் கொண்டு செல்லப்பட்ட வெடிப்பொருள் சாதனம் வீட்டில் தயாரிக்கப்பட்டதாகவும், அருகிலுள்ள காட்டில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

வெடிக்கும் சாதனத்தை உருவாக்க பயன்படும் வகை மற்றும் முறையை அடையாளம் காண இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன. காவல்துறையினர் இந்த செயலை கடுமையாக கருதுகின்றனர். ஏனெனில் இது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here