பூ வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி; மீண்டும் வணிகத்தை தொடங்கலாம் என்று சரவணன் தகவல்

பூக்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அதன் வர்ணமும், வாசமும் தான். பூக்களை பார்க்கும் போது நம் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும் என்பதனை யாரும் மறுக்க முடியாது. நாட்டில்  பூ வியாபாரத்தை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றினால் முழு நடமாட்டு கட்டுபாட்டு ஆணை (எம்சிஓ) அமலுக்கு வந்தபோது பூ வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.

இது குறித்து மக்கள் ஓசை நாளிதழில் நமது நிருபர்கள் அவர்களின் துயரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். இந்த விஷயம் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சரவணன் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டது.

அவர் நேற்று நடைப்பெற்ற தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில், நாடு முழுமையும் பூக்கடை வியாபாரிகள் செயல்படவும், கேமரன் மலை மற்றும் பிற இடங்களில் பூக்கள் பயிரிடும் தொழில் செய்வோர் தங்கள் வணிகத்தைத் தொடரவும் நான் அனுமதி கோரினேன். அரசாங்கம் இதற்கான அங்கீகாரத்தினை வழங்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here