பேருந்து நிலையத்தில் பிறந்து இரு தினங்களே ஆன பெண்குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது

நெகிரி செம்பிலான், Sekolah Menengah Kebangsaan (SMK) ஃபெல்டா ஸ்ரீ செண்டயான் அருகே பேருந்து நிலையத்தில் ஒரு பெண் குழந்தை  துண்டில் போர்த்தப்பட்டு ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் சையத் இப்ராஹிம் கூறுகையில், பிறந்து இரு தினங்களே ஆன குழந்தையை இன்று காலை 11.58 மணிக்கு பள்ளியில் துப்புரவுத் தொழிலாளி கண்டுபிடித்தார்.

பின்னர் குழந்தை மேலதிக பரிசோதனைக்காக துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு (எச்.டி.ஜே) சிரம்பானுக்கு அனுப்பப்பட்டது என்று அவர் பெரித்தா ஹரியான் அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, தகவல்கள் தெரிந்த பொதுமக்களின் ஒத்துழைப்பை காவல்துறை எதிர்பார்க்கிறது. 012 7778789 என்ற எண்ணில் இன்ஸ்பெக்டர் Adi Khusaini Saripudin வழக்கு விசாரணை அதிகாரியைத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். குழந்தையின் தாயைக் கண்டுபிடிப்பதற்காக குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் படி மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here