தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர்; சாலை விபத்தில் மூளைச்சாவு

சென்னை: பிரபல கன்னட நடிகரான சஞ்சாரி விஜய் விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். 38 வயதே ஆன கன்னட நடிகரான சஞ்சாரி விஜய் நேற்று  தனது நண்பரை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கினார் சஞ்சாரி விஜய். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சஞ்சாரி விஜய். ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.மூளையின் வலது பக்கத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தக்கசிவும் ரத்த உறைதலும் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் நடிகர் சஞ்சாரி விஜய் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சஞ்சாரி விஜய்க்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.  2011ஆம் ஆண்டு வெளியான ரங்கப்பா ஹாபிட்னா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் சஞ்சாரி விஜய். தொடர்ந்து தசவலா, ஹரிவு, ஒக்கரனே, கில்லிங் வீரப்பன், வர்தமன, சிப்பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முதல் தேசிய விருது நானு அவனல்ல அவளு படத்தின் மூலம் பெரும் பிரபலமானார் சஞ்சாரி விஜய். இந்தப் படத்திற்காக முதல் தேசிய விருதையும் பெற்றார் சஞ்சாரி விஜய். அவரது திடீர் மறைவு கன்னட சினிமாவை உலுக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here