பணியிடங்களில் அதிகரித்துவரும் கோவிட் -19 தொற்றுக்கள்; சுகாதார தலைமை இயக்குநர் தகவல்.

புத்ரஜெயா, (ஜூன் 15) : நாட்டில் கடந்த சில தினங்களாக கோவிட் -19 தொற்று நோயின் தாக்கம் குறைவடைந்து வருகின்றது. இருப்பினும் தினசரி கோவிட் -19 தரவை நோக்கும் போது, பணியிடத்தில் தொற்றுப் பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை பணியிடங்களில் மட்டும் மொத்தமாக 1,328 தொற்று பரவல்களின் கொத்தாணிகளை சுகாதார அமைச்சு இனங்கண்டுள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மேலும் இதுவரை 624,246 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதில் 147,040 பேருக்கு இத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நாட்டில் நேற்று (ஜூன் 14) 17 தொற்றுப்பரவல் கொத்தணிகள் இனங்காணப்பட்டன என்றும் அதில் 12 கொத்தணிகள் பணியிடங்களில் உருவானவையாகும்.

அத்துடன் இப்பணியிட தொற்றுக்களில் பாதிக்கப்படுபவர்களில் 68 விழுக்காட்டினர் (100,086 பேர்) அந்நிய நாட்டினராவர் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here