மனித வரலாற்றை சுறா மீன்முறியடிக்குமா?

150 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த  இனமாம்!

மனித இனம் தோன்றாத காலத்தே பல வித உயிரணங்கள் வாழ்ந்திருக்கின்றன என்பது யூகம் அல்ல. நீர் தோன்றிய கால்த்திலிருந்தே உயிரனங்கள் இருந்திருக்கின்றன என்பதை சாதாரண மனிதனும் கணித்துவிடுவான். அந்த வகையில் உலகில் மிகப்பழமையான 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சுறா மீன் இனம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஜூராஸிக் வாழ்ந்த காலத்தில் உள்ள பாறைப்படிவங்களில் இங்கிலாந்தின் கடற்கரை பகுதியில் சுறா மீன் படிவத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் வடக்கு கடற்கரை ஆழமற்ற பகுதியில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உள்ள புதைப்படிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை இங்கிலாந்தின் எட்சஸ் கலெக்சன் மியூசியம் ஆஃப் ஜூராஸிக் மெரைன் லைஃப் என்ற மியூசியத்தில் வைத்துள்ளனர். இது தற்போது சுறா மீன் புதைப்படிவம் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரியவகை சுறா மீன் வகைகள் சிறுகோள் பூமியை தாக்கியபோது அழிந்துபோய்விட்டன. மேலும், சுறாமீனின் பற்கள் குருத்தெலும்புகளால் ஆனவை என்பதால் இந்த பற்களை கொண்டு சுறாமீனின் இனத்தை கண்டுகொள்ளமுடியும்.

அதனால் தற்போது இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுறாவின் புதைப்படிவம் எந்த வகையை சேர்ந்தவை என்று விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here