நள்ளிரவு வரை நடந்த விருந்து: கைது செய்யப்பட்ட 8 பேரில் இரு 15 வயது சிறுமிகளும் அடங்குவர்

ஷா ஆலம்:  பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து விருந்தில் நடத்திய ஒரு கும்பலை போலீசார் கைது செய்தனர். ஐ-சிட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை (ஜூன் 21) அதிகாலை 1 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக ஷா ஆலம் ஒ.சி.பி.டி உதவி ஆணையர் பஹாருடின் மாட் தைப் தெரிவித்தார்.

படிவம் 3 இல் இருக்கும் 15 வயது சிறுமிகள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட் நபர்கள் 15 முதல் 23 வயதுடையவர்கள். அனைவருக்கும் குழு சம்மன் வழங்கப்பட்டன மற்றும் சிறுநீர் பரிசோதனைக்காக ஷா ஆலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அதில் ஏழு பேர் போதைப்  பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஏழு பேரும் ஷா ஆலம் நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here