மூன்று முறை வெடித்தது இந்தோனேசியாவின் மவுண்ட் மெராபி எரிமலை; 3 KM உயரம் வரை எழுந்து வெளியேறிய சாம்பல்.

ஜகார்த்தா, ( ஜூன் 25) :

இந்தோனேசியாவின் மிகவும் உயிர்ப்பான எரிமலை மவுண்ட் மெராபி மூன்று முறை வெடித்தது.

வெடித்து சிதறிய எரிமலை மூன்று கிலோமீட்டர் (KM) உயரம் வரை பீறிட்டுக் கொண்டு சாம்பலை வெளியேற்றியது. இதனால் ஜகார்த்தாவில் பல பகுதிகள் முழுவதும் அடர்த்தியான தூசியில் மூழ்கியுள்ளன என்று புவியியல் பேரிடர் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் தலைவர் ( BPPTKG), ஹனிக் ஹுமைடா தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூன் 25) உள்ளூர் நேரம் அதிகாலை 4.43 மணிக்கு 61 விநாடிகள் முதல் வெடிப்பு தொடங்கியது, இரண்டாவது வெடிப்பு 131 விநாடிகள் என்றும் மூன்றாவது வெடிப்பு 245 விநாடிகள் வரை நிகழ்ந்தது என்று சின்ஹுவா (Xinhua) தெரிவித்துள்ளது.

மேலும் இந்த எரிமலை வெடிப்புப் காரணமாக புகை மேகங்கள் அதன் உச்சத்திலிருந்து 1,000 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன” என்று ஹுமைடா கூறினார்.

உள்ளூர் நேரப்படி காலை 7.33 மணியளவில், ஜகார்த்தா மற்றும் மத்திய ஜாவாவைக் கடக்கும் மெராபி, தென்கிழக்கில் ஒரு கி.மீ தூரத்தில் 104 வினாடிகள், அதன் உச்சத்திலிருந்து 600 மீட்டர் உயரத்தில் வெப்பமான சாம்பலை வெளியேற்றியது.

நேற்று நள்ளிரவு (ஜூன் 24) முதல் இன்று காலை 6 மணி வரையிலான கண்காணிப்பின் அடிப்படையில், அதன் மூன்றாம் நிலை ஆபத்து நிலையில் இருக்கும் 2,968 -மீட்டர்-உயரம் வரை சென்று எரிமலைக்குழம்பினை ஐந்து முறை தென்மேற்கிலும், ஆறு முறை தென்கிழக்கு பகுதியிலும் துப்பியது (வெளியேற்றியது).

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து BPPTKG குடியிருப்பாளர்களை அமைதிப்படுத்தவும், முகமூடிகளை அணியவும், நீர் சேமிப்பு பகுதிகளை மூடவும் அறிவுறுத்தல்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தென்மேற்கு பகுதியில் உள்ள ஆறுகளான குவாங், பாயோங், பெடாக், கிராசக், பெபெங் மற்றும் புதி போன்ற ஆறுகளில் லாவா மற்றும் தூசிகள் பரவுவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளதாக நம்பப்படுகின்றது.

எரிமலையின் சாம்பல் எரிமலையின் உச்சியில் இருந்து மூன்று கி.மீ சுற்றளவில் இந்த பகுதி முழுதும் பரவிக் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here