காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து தான் தேவை

குதிரைதான் வண்டியை இழுக்கும்ப.சிதம்பரம்

புதுடில்லி:
‘குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும்… வண்டியால் குதிரையை இழுக்க முடியாது. ஜம்மு – காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும்’ என, ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசுத் தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு -காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்கள், ‘ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினர். 
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது:The horse pulls the cart. A state must conduct elections. Only such elections will be free and fair.Why does the government want the cart in front and the horse behind? It is bizarre.- P. Chidambaram (@PChidambaram_IN) June 25, 2021
காங்கிரஸ் , ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் , தலைவர்கள் முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என விரும்புகின்றனர். அதன் பின்னர் தேர்தல்களை நடத்தலாம் என்கிறார்கள்.

மத்திய அரசின் பதில் முதலில் தேர்தல், பின்னர் மாநில அந்தஸ்து எனக் கூறுகிறது. குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும். ஜம்மு – காஷ்மீருக்கு முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். அதன் பின் தேர்தல் நடத்த வேண்டும். மாநில அரசு தான் சரியான முறையில் தேர்தலை நடத்த முடியும்.

ஆனால் மத்திய அரசோ முதலில் தேர்தல் நடத்த முயலுகிறது. வண்டியால் குதிரையை இழுக்க முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here