பெட்டாலிங் ஜெயா, ( ஜூன் 27) :
கோலாலம்பூரின் ஜாலான் புடுவிலுள்ள பொழுதுபோக்கு மையத்தில் நேற்று (ஜூன் 26) இரவு நடத்தப்பட்ட சோதனையில் 22 உள்ளூர் பெண்கள் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பொழுதுபோக்கு மையத்தில் சூதாட்டம், விபச்சாரம் போன்ற குற்றங்கள் நடைபெறுவதாக கிடைத்த தகவலூடாக (D 7) கோலாலம்பூர், குற்றப் புலனாய்வுத் துறை (JSJ) கோலாலம்பூர் ஆகியவற்றின் குற்றப்பிரிவு என்பன இணைந்து, கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் நஸ்ரி மன்சூர் தலைமையிலான சோதனை இரவு 9.30 மணிக்கு தொடங்கியது.
ஆரம்ப விசாரணையின் அடிப்படையில், பொழுதுபோக்கு மையத்தில் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் மதியம் 1 மணியளவில் ஒரு விடுதியின் அடித்தளத்தில் உள்ள வளாகத்திற்குள் நுழையத் தொடங்கினர் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (MCO) அமல்படுத்தியதிலிருந்து, பொழுதுபோக்கு மையங்கள் அடிக்கடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் இம்மையங்கள் பெரும்பாலும் அனுமதியின்றி இயங்கிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.