ஜிலேபி, முறுக்கு விலை தடால் உயர்வு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  அதிரடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜிலேபி, முறுக்கு பிரசாத விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று நடத்தப்படும் சேவையில் ஜிலேபி, முறுக்கு ஆகியவை ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும். இதில், கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஒரு முறுக்கு, ஜிலேபி பிரசாதமாக வழங்கப்படும்.

இது தவிர முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் அடிப்படையில் பக்தர்களுக்கும் முறுக்கு, ஜிலேபி பிரசாதத்தை தேவஸ்தானம் பணம் பெற்றுக் கொண்டு வழங்கும்.

இதுநாள் வரை 100 ரூபாய்க்கு ஒரு முறுக்கு, ஒரு ஜிலேபி ஆகியவை பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முடிவின் அடிப்படையில் ஒரு முறுக்கு, ஒரு ஜிலேபி அடங்கிய பிரசாதத்தின் விலை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here