பாலின ஊதிய ஏற்றத்தாழ்வு

திரைத்துறை குறித்து டாப்ஸீ அதிரடி பேட்டி.!

சமீபத்தில் நடிகை டாப்ஸி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் ‘ஹசீன் தில்ருபா’. நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிய இந்த திரைப்படம் மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகின்றது. இந்த திரைப்படம் குறித்து அவர் அளித்த பேட்டியில், இந்தி திரைப்படத் துறையில் நிலவுகின்ற பாலின ஊதிய ஏற்றத்தாழ்வு மோசமானது என்று கூறியுள்ளார் டாப்ஸி.

மேலும், “ஒரு பெண் கலைஞர் அதிகமாக சம்பளம் கேட்டால், உடனே திரைத்துறையினர் அவரை ‘சர்ச்சைக்குரியவர்’, ‘சிக்கலானவர்’ என்ற முத்திரையைக் குத்தி விடுகிறது.

ஆனால், ஒரு ஆண் கலைஞர் சம்பளம் அதிகமாகக் கேட்டால், ‘நடிகரின் வெற்றிக்கு கிடைத்த அங்கீகாரம்’ என்று கொண்டாடுகின்றனர். நான் சினிமாவில் கால் பதித்தபோது நடிக்க ஆரம்பித்த பல ஆண் நடிகர்கள் தற்போது என்னை விட 3 முதல் 5 மடங்கு வரை அதிகம் சம்பாதிக்கின்றனர்.

மேலும், பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்படுகின்ற திரைப்படங்கள் அனைத்தும் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகின்றது. இதற்கு ரசிகர்களும் காரணமாகின்றனர். 

இதன் காரணமாக தான் பெண்களை மையமாக கொண்ட படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் குறைந்த வசூல் கிடைக்கிறது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here