தனது மாமாவை கொலை செய்ததாக 36 வயது வேலையில்லாத ஆடவர் கைது

தாங்காக்:  சுங்கை மாட், கம்போங் செரோம் 3 இல் உள்ள குடும்ப வீட்டில் மாமாவை கொலை செய்ததாக 36 வயது வேலையற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று (ஜூலை 12) பிற்பகல் 1.19 மணியளவில் 72 வயதானவர் சம்பந்தப்பட்ட கொலை குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தங்காக் ஓ.சி.பி.டி துணை  ஆணையர்  முகமட் ஃபடில் மின்ஹாட் தெரிவித்தார்.

வேலையற்ற ஆடவர் கத்தியால் குத்தியதால் வயதானவர் உயிரிழந்தார் என்ற தகவலை பெற்றதாக அவர் கூறினார். போலீஸ் குழு உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்தது. கொலை செய்ய பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆயுதமான கத்தியையும் நாங்கள் கைப்பற்றினோம் என்று அவர் இங்கே கூறினார்.

காலை 11.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது சந்தேக நபர் மற்றும் பாதிக்கப்பட்டவர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் ஒரு சிறு குழந்தையாக இருந்ததில் இருந்து அவருடன் தங்கியிருந்தார் என்று அவர் கூறினார். மரணத்திற்கான காரணம் அறியவும்  கோவிட்-19  பரிசோதனைக்காக உடல் தங்காக் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

போதைப்பொருள் உட்பட ஆறு குற்றங்களைக் கொண்ட சந்தேக நபரை நாளை (ஜூலை 13) நீதிமன்றத்திற்கு  செய்ய போலீசார் அழைத்து வருவார்கள் என்றும்  கூறினார். கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் காவல்துறையினர் இந்த வழக்கை வகைப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here