பெந்தோங், Pulau Santap-இல் உள்ள முகாமிடும் தளத்தில் இன்று காலை மரம் விழுந்து நேர்ந்த துயரச்சம்பவத்தில், ஒரு பெண் பலியாகி, இருவர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர் 38 வயதுடைய Herini Muhammad Ali என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
காலை 7.56 மணிக்கு அழைப்பு வந்ததும், பெந்தோங் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் என பஹாங் மாநில தீயணைப்பு, மீட்புத் துறை பொது தொடர்பு அதிகாரி Zulfadli Zakaria தெரிவித்தார்.
அங்கு சென்றபோது, சரிந்த மரம் முகாமிடும் கூடாரத்தின் மீது விழுந்து, ஒரு ஆண் மற்றும் ஒரு சிறுவன் காயமடைந்ததோடு, ஒரு பெண் பலியானது கண்டறியப்பட்டது.
மீட்பு குழுவினர் சரிந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
உயிர் இழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.



















