கவிக்கோ வைரமுத்து தனது பிறந்த நாளில் கலைஞர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார்

சென்னை: தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து மரியாதை செலுத்தினார். இது குறித்து டிவிட்டரில் இன்று என் பிறந்த நாள் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி வணங்கினேன். வள்ளுவர் சிலைக்கு மாலை சூட்டினேன் என குறிப்பிட்டு அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

கவிக்கோ வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் ஓசை நிருபர் செ.குணாளன் எழுதிய கவிதை:

வைரமாய் கவிக்கோ

அரசு என்றாலும்
ஐயா நீர்
பேரரசு…..
கவிக்கோ என்றாலும்
ஐயா நீரே
கவிக்கெல்லாம் கோ….!

குமணனார்
கூட்டிவந்த
வைகறை
மேகம்….!
கோலமிட்டு
ஆடும் எழில்
கோபுரத்தின்
கலசம்….!!!

வடுகப்பட்டி
கண்டெடுத்த
நீர்
வார்த்தை
ஜாலப் பாட்டு…
வானாம்பாடி
போல நீயும்
பாடிச் சமைத்தாய்
கவிதைக்காய்க்
கூட்டு…!

ஆலமரம்
போல நீயும்
அசையாத
வேர்களில்
நின்று
தாலாட்டும்,
கவிதைத்
தென்றல்…!

மெல்ல மெல்ல
நீ நகர்ந்து
மேடை ஏற்றம்
கண்டாய்….
மேடை கண்ட
வானத்தில்
நீ
வெள்ளி நிலவாய்
மிதந்தாய்..!

ஆளை
மயக்கும்
பாடல்
வரிகளில் நீ
அகவை நூறு
கொள்வாய்….
வாழும் வரை
இதயச்
சிம்மாசனத்தில்
வைரமுத்து வாகி
ஒளிர்வாய்…!

இனிய அகவை நாள் தமிழுறவே…!

செ.குணாளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here