மும்பையில் ஏற்பட்ட நிலச்சரிவு – இதுவரை 23 பேர் பலி

இந்தியாவின பொருளாதார நகரான  மும்பையில் பல வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது மற்றும் நிலச்சரிவு காரணமாக 23 பேர் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். மழைநீர் நீர் சுத்திகரிப்பு வளாகத்தையும் மூழ்கடித்தது.  இது “மும்பையின் பெரும்பாலான பகுதிகளில்”  நீர் விநியோகத்தை தடைசெய்தது. மும்பை 20 மில்லியன் மக்கள் வாழும் நகரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிழக்கு புறநகர்ப் பகுதியான செம்பூரில் இன்று அதிகாலையில் விழுந்த மரம் ஒன்றினால் சுவர் இடிந்து அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மரணமடைந்தனர் என்று  தேசிய பேரிடர் பொறுப்புப்  படை (NDRF) தெரிவித்துள்ளது. இது வரை இடிபாடுகளில் இருந்து பதினேழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பக்கத்து வீட்டில், குப்பைகளில் சிக்கிய ஒரு சிறுமியைக் கண்டேன். அவள் ‘என்னைக் காப்பாற்று, என்னைக் காப்பாற்று’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள் ”என்று செம்பூரில் பெய்த மழையில் சிக்கிய ஃபிரோஸ் கான் தெரிவித்தார். அவள் உடல் சேற்றில் சிக்கியது. எப்படியோ, நான் அவளை வெளியே இழுக்க முடிந்தது. அவள் கால்களில் காயங்கள் ஏற்பட்டன என்றார். மற்றொரு குடியிருப்பாளரான மந்தா கவுதம் பிரதான், “பாறைகள் மற்றும் மண் … மழைநீருடன் மலையிலிருந்து கீழே இறங்குவதை” பார்த்ததாகக் கூறினார்.

நகரின் வடகிழக்கில் உள்ள விக்ரோலியின் புறநகரில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஐந்து வீடுகளில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 6 பேர் கொல்லப்பட்டதாக என்.டி.ஆர்.எஃப். அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் ஜூன்-செப்டம்பர் பருவமழை காலத்தில் கட்டிட சரிவுகள் பொதுவானவை, பழைய மற்றும் கரடுமுரடான கட்டமைப்புகள் இடைவிடாத மழையின் நாட்களில் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுகின்றன.

கடந்த மாதம், மும்பை ஒதுக்குபுறம் ஒன்றில் கட்டிடம் இடிந்து விழுந்து 12 பேர் கொல்லப்பட்டனர். கடந்த செப்டம்பரில்,  தலைநகருக்கு அருகிலுள்ள பிவாண்டியில் மூன்று மாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து 39 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை சனிக்கிழமை முதல் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் எப்போது மீட்டெடுக்கப்படும் என்று நகரத்தின் குடிநீர் அமைப்பு சொல்லவில்லை. ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீரை  கொதிக்க விடுமாறு  குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு “மிதமான முதல் கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை” முன்னறிவிக்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலை டுவீட் செய்ததோடு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here