விஞ்ஞானிகள், எதிர்கட்சியினரின் எச்சரிக்கைகளையும் மீறி கோவிட் கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியது இங்கிலாந்து .

இங்கிலாந்து, ஜூலை 19:

விஞ்ஞானிகள் மற்றும் எதிர்க்கட்சியினரின் எச்சரிக்கைகள் எதிர்ப்புகளையும் மீறி, இங்கிலாந்து அரசு இன்று (ஜூலை 19) முதல் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளது.

முக கவசம், தனி நபர் இடைவெளி, வீட்டில் இருந்தே வேலை போன்ற கட்டுப்படுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் இரவு நேர கேளிக்கை விடுதிகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் சுகாதார அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் இப்போது கட்டுப்பாடுகளை விலக்காமல், வரும் குளிர்காலத்தில் விலக்கினால், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து விடும் என்றும் அவர் முன்னர் ஒரு செய்தியில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கிலாந்தில் 3 ல் இரண்டு பங்கு மக்கள் தொகையினருக்கு குறைந்தது தடுப்பூசியிம் முதல் அளவு மட்டும் போடப்பட்டுள்ளது. எனவே தொற்று அதிகரித்தாலும் அதை சமாளித்து விடலாம் என கருதி, பிரதமர் போரிஸ் ஜோன்சன்(Boris Johnson) கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here