கடந்த 24 மணி நேரத்தில் 12,366 கோவிட் -19 தொற்று பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 10,000 இல் இருந்தது இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
ஒரு டுவீட்டில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 939,899 ஆக உள்ளது. சிலாங்கூரில் 5,524 தொற்று என அதிகம் பதிவாகியுள்ளன.