17 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது; CITF தகவல்

புத்ராஜெயா, ஜூலை 22:

மாரடைப்பு மற்றும் இருதயத் தொற்று அபாயங்களைத் தவிர்ப்பதற்காக, SPM மாணவர்கள் உட்பட 17 வயது மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையவர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று அரசாங்கம் முடிவு எடுத்ததாக கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (CITF) தெரிவித்துள்ளது.

இருப்பினும், பெரிய தேர்வுகளுக்கு அமர்ந்து 18 வயதை எட்டிய மாணவர்கள், STPM மற்றும் STAM பரீட்சாத்திகளுக்கும், இந்த ஆண்டு 18 வயதுக்குட்பட்டவர்கள் உட்பட, அவர்கள் சம்பந்தப்பட்ட தடுப்பூசி திட்டங்கள் நியமிக்கப்பட்ட தேதிகளில் திட்டமிடப்பட்டபடி தொடரும் , ”என்றார்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான ஆயத்தப்பணிகளில் ஒரு பகுதியாக ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், மாநில மற்றும் மாவட்ட கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளால் கூட்டாக கண்காணிக்கப்படும் என்றும் CITF தெரிவித்துள்ளது.

“நீண்டகால நோய்கள் மற்றும் கோவிட் -19 நோய்த்தொற்று அபாயத்தில் இருக்கும் இளம் பருவத்தினருக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்துவது குறித்து மருத்துவ வழிகாட்டுதல்களையும் சுகாதார அமைச்சகம் ஆராய்ந்து செயல்படும் என்றும் அது கூறியது.

“மேலும் இந்த பிரிவினருக்கு தடுப்பூசி அமல்படுத்துவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டவுடன் CITF இதை அறிவிக்கும்” என்று அது கூறியது.

மேலும், கோவிட் -19 தடுப்பூசிக்கு பதிவு செய்த 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடுவதற்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை என்றும் கோவிட் -19 நோய்த்தடுப்பு பணிக்குழு (CITF ) தெரிவித்துள்ளது.

மைசெஜ்தெரா அமைப்பு இளமைப் பருவத்திற்கான தடுப்பூசி பதிவை ஏற்றுக்கொண்டது, இதனால் எதிர்காலத்தில் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் போது அதைப் பயன்படுத்தலாம் என்றும் கூறியது.

“இப்போதைக்கு, தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முன்னுரிமை 2 ஆம் கட்டத்திற்கான தடுப்பூசியை முடிப்பதும், 3 ஆம் கட்டத்தை நாடு தழுவிய அளவில் மேம்படுத்துவதும் என்று வியாழக்கிழமை (ஜூலை 22) ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here