சிட்னி, ஜூலை 24:
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வேகமாக பரவிவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநில அரசாங்கம் அவசரநிலையை அறிவித்துள்ளது.
டெல்தா வகை கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஒரு மாத காலமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த உதவவில்லை என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொற்றுப் பரவலைக் குறைக்க தங்கள் மாநிலத்துக்கு தடுப்பூசிகளை அதிகம் வழங்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்தை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் கோரியுள்ளது.
அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 136 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த ஒரு நாள் தொற்று எண்ணிக்கையே சமீப நாட்களில் ஏற்பட்டதை விட மிக அதிகம் எனவும் கூறப்படுகின்றது.