பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ராமசந்திரன் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன் நேற்று ஜூலை 23ஆம் தேதி இரவு 7 மணியளவில் அவரது வீட்டின்முன் மூன்று அல்லது நான்கு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது காரில் இருந்து இறங்கியவுடன் அவரைத் தாக்கியுள்ளனர். 70 வயதான டத்தோ இராமாவின் உடலில் வெட்டு காயங்கள் இருக்கின்றன. இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாக இல்லை. இந்த சம்பவத்திற்கு பின்னர் அவர் நேற்று பி.எம் அரசு மருத்துவமனையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.

நான் நேற்று இரவு 10 மணியளவில் அவரைப் பார்க்கச் சென்றேன். அவர் தாக்கப்பட்டாரா இல்லையா என்று என்னிடம் கேட்கும் அளவுக்கு அவர் சுயநினைவுடன் இருந்தார். அவர் தாக்கப்பட்டுள்ளதாக நான் சொன்னேன்.

நேற்று இரவு அவர் செபராங் ஜெயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் நேற்று அவரது மனைவி மற்றும் மருமகனால் ஒரு போலீஸ் அறிக்கை செய்யப்பட்டது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள சந்தேக நபர்களை போலீசார் விசாரிக்கின்றனர்.

டத்தோ இராமா சிறந்த மனிதர், தொழிலாளர் விஷயங்களில் மிகவும் அறிவார்ந்தவர், முன்னாள் பிரபல தொழிற்சங்கவாதி மற்றும் மனிதவள மேலாளர். அவர் ஓய்வு பெற்றதும், டிஏபி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இரண்டு முறை எம்.பி.எஸ்.பி நகரான்மைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

நகரான்மைக்கழக பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டத்தோ இராமாவின்  அனுபவத்தையும் அறிவாற்றலையும் கண்டு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநராக (ED) நியமிக்கப்பட்டார். பினாங்கு மாநிலத்தில் இந்தியர்களுக்கு சேவை செய்வதற்கான முன்னணி அமைப்பாக அறப்பணி வாரியத்தை வலுப்படுத்துவதில் அவர் தனது நிலைப்பாட்டில் சிறந்து விளங்கினார். டத்தோ இராமாவிற்கு எதிரான தாக்குதல் பினாங்கு அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதலாகும்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மற்றும் நானும் அதன் தலைவராக இருக்கிறேன். பினாங்கு அரசாங்கத்தின் பிரதிநிதியாக நான் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டுவேன் என்றும், தாக்குதலுக்குப் பின்னால் கோழைகளுக்கு பயப்படப்போவதில்லை என நான் பினாங்கு இந்தியர்களுக்கு உறுதியளிக்கிறேன். இதற்கிடையில், டத்தோ இராமா விரைவில் குணமடை வேண்டியும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here