தலிபான்கள் மீதான வான்வெளித் தாக்குதல்

தொடரும்…..!   அமெரிக்கா அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல் அதிகரித்துள்ள சூழலில், அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக வான்வெளித் தாக்குதலை தொடர உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் சொந்த நாட்டிற்கு திரும்பிவரும் சூழலில், கடந்த சில வாரங்களாக தலிபான்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது. பல்வேறு பகுதிகளை மீண்டும் தங்கள்வசம் கொண்டு வந்துள்ள தலிபான்கள், தாக்குதலை தொடர்கின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு உதவும் வகையில் தலிபான்களின் நிலைகள் மீது வான்வெளித் தாக்குதலை தொடர உள்ளதாக அமெரிக்க ராணுவத்தின் கமாண்டர்களில் ஒருவரான கென்னத் மெக்கன்சி தெரிவித்துள்ளார்.

ராணுவ நடவடிக்கைகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி முடித்துக்கொள்ள ஏற்கெனவே அமெரிக்கா இலக்கு நிர்ணயித்துள்ள சூழலில், அதன் பின்னரும் வான்வெளி தாக்குதல் தொடருமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் அரசியல் ரீதியான தீர்வுக்கு இன்னும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்க ராணுவத்தின் கமாண்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here