பாராளுமன்றத்தின் தற்போதைய கோவிட் -19 நிலைமை; 2 எம்.பி.க்கள், 12 நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கோவிட் -19 தொற்று உறுதி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 26 :

கோவிட் -19 பரிசோதனையில் 2 எம்.பி.க்கள் மற்றும் 12 நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது என்று நாடாளுமன்ற சபாநாயகர் அசார் அஜீசன் ஹருன் தெரிவித்தார்.

58 மற்ற நாடாளுமன்ற ஊழியர்களும் 5 அல்லது 6 எம்.பி.க்களும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“வெள்ளிக்கிழமை ஸ்வாப் சோதனைகள் (swab test) மேற்கொள்ளப்பட்டதிலிருந்து இதுவே பாராளுமன்றத்தின் தற்போதைய கோவிட் -19 நிலைமை” என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here