திடீரென கன்னத்தில் அறை

 விளக்கத்தில் வெளியான காரணம்..!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுகொண்டிருந்த வீராங்கனையை அவரது பயிற்சியாளர் கன்னத்தில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே போட்டியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த ஜெர்மன் ஜூடோ வீராங்கனையான Martyna Trajdos அவரின் பயிற்சியாளர் Claudiu Pusa திடீரென கன்னத்தில் அடிக்கத் தொடங்கினார்.

இதனை தொடர்ந்து Martyna அடியை வாங்கிக்கொண்டு போட்டிக்கு செல்கிறார். இந்தவீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் மக்களிடையே கோபம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து Martyna கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் எனது பயிற்சியாளரான Claudiu மீது யாரும் கோபம் கொள்ள வேண்டாம் என்றும் ஜெர்மனியில் போட்டிக்கு செல்வதற்குமுன் போட்டியாளரை உற்சாகப்படுத்த இப்படி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தான் எங்களின் பாரம்பரிய வழக்கம் என்றும் நான் தான் இவ்வாறு செய்ய சொன்னேன் எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here