பிரபல நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் இருக்கிறார்

தலையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு பிரபல சீரியல் நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் இருக்கிறார். 

கோவை அனுராதா இயக்கிய ‘காஸ்ட்லி மாப்பிள்ளை’, ‘கிரீன் சிக்னல்’, கே.பாலசந்தர் இயக்கிய ‘காதல் பகடை’, ‘காசளவு நேசம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் வேணு அரவிந்த். அதனைத் தொடர்ந்து ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்த ‘செல்வி’ சீரியலில் அவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து ‘வாணி ராணி’, ‘அக்னி சாட்சி’, ‘சந்திரகுமாரி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தார். இது தவிர பல்வேறு திரைப்படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேணு அரவிந்துக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சை நிறைவடைந்த நிலையில், வேணு அரவிந்த் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here