நேபாளம்: போராட்டம்; நட்சத்திர விடுதியில் தீ விபத்து – இந்தியப் பயணி பலி!

கோலாலம்பூர்: நேபாளத்தில், பசுபதினாத் கோயிலுக்குச் (Pashupatinath Temple) புனிதப் பயணம் மேற்கொண்ட, காஜியாபாத் (Ghaziabad) தம்பதிக்கு, ஒரு சோகமானச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் (Kathmandu), நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களால், அவர்கள் தங்கியிருந்த, `ஹயாட் ரீஜென்சி’ (Hyatt Regency) நட்சத்திர விடுதிக்கு, தீ வைக்கப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அன்று, தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, விடுதியின், நான்காவது மாடியிலிருந்து, குதித்த, 55 வயது ராஜேஷ் கோலா (Rajesh Gola), உயிரிழந்தார். அவரது கணவர், ராம்வீர் சிங் கோலா (Ramveer Singh Gola), படுகாயமடைந்துள்ளார். கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல், நேபாளத்தில், தங்கியிருந்த இந்தத் தம்பதியினர், போராட்டக்காரர்கள், விடுதிக்குத் தீ வைத்ததால், தப்பிக்க வேறு வழியின்றி, கீழே குதித்துள்ளனர்.

போராட்டத்தின், குழப்பத்தில், கணவரை, மனைவி, பிரிந்துள்ளார். பின்னர், ஒரு நிவாரண முகாமில், தனது மனைவி, உயிரிழந்ததை, ராம்வீர், தெரிந்துகொண்டார். தனது தாயார், கோயிலுக்கு, மேற்கொண்ட புனிதப் பயணம், அவரது “கடைசிப் பயணமாக” மாறியது என்று, அவர்களது மகன் விஷால் கோலா (Vishal Gola) வேதனையுடன் கூறினார். இந்தப் பிரச்சினையில், நேபாளத்தில் உள்ள, இந்தியத் தூதரகம், போதிய உதவிகளைச் செய்யவில்லை என்றும், குடும்பத்தினர், விமர்சித்துள்ளனர். ராஜேஷ் கோலாவின் உடல், நேற்று இரவு, காஜியாபாத்திற்கு, கொண்டு செல்லப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here