மக்களவை கூடிய 3 நாட்கள் குழப்பத்துடன் இருந்தததால் திங்கள்கிழமை கூடுமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை.
நாடாளுமன்ற வளாகத்தில் கோவிட் -19 நிலைமை குறித்து சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்புகளுக்காக காத்திருப்பதாக துணை சபாநாயகர் முகமது ரஷித் ஹஸ்னான் கூறினார்.
நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் பல கோவிட் -19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், சுகாதார அமைச்சகத்தின் மேலும் புதுப்பிப்புகளுக்காக நாங்கள் காத்திருத்திருக்கிறோம்.
ஜனவரி முதல் அவசரகாலச் சட்டத்தின் போது விதிக்கப்பட்ட பிற சட்டங்களுக்கிடையில், அவசரகால சட்டங்களை ரத்து செய்வது குறித்து சட்டத்துறை அமைச்சர் தகியுதீன் ஹசான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும்.
வியாழக்கிழமை, இரண்டு ஊழியர்கள் நேர்மறையானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் நிறுத்தப்பட்டது
வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு, கோவிட் -19 சோதனைகள் நடத்தப்படும் வரை நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும்- நாடாளுமன்ற உறுப்பினர்கள், உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள்-கட்டிடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ரஷீத் கூறினார்.
மாலை 5.15 மணிக்கு, மேலும் இரண்டு உறுதி செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ரஷீத் கூறினார். மேலும் அமர்வை ஒத்திவைக்குமாறு அழைப்பு விடுத்தார். அதற்கு முன், அமர்வு மூன்று முறை இடைநிறுத்தப்பட்டது – மதியம் 12.30, 12.45 மற்றும் 2.30 மணி.
அவசரகால கட்டளைகளை ரத்து செய்ய மாமன்னரிடம் அரசாங்கம் அனுமதி கேட்கவில்லை என்று இஸ்தானா நெகாரா ஒரு அறிக்கையை வெளியிட்ட பிறகு குழப்பம் ஏற்பட்டது.
சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஜூலை 29 ஆம் தேதி நிலவரப்படி, 11 கோவிட் -19 சம்பவங்கள் நாடாளுமன்றத்தில் கண்டறியப்பட்டதாகக் கூறினார்.





























