தாய்லாந்து பிரதமருக்கு எதிர்ப்பு

20 கிலோமீட்டர் வாகனப் பேரணி!

தாய்லாந்து:

கொரோனா தொற்றை திறம்பட கையாளத் தவறியதாகக் கூறி, தாய்லாந்து பிரதமருக்கு எதிராக பிரமாண்ட வாகனப் பேரணி நடைபெற்றது.


ஊரடங்கால் பொருளாதாரம் பாதிப்பு, தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் தாய்லாந்து அரசு மீதான அதிருப்தி அதிகரித்தது.

தலைநகர் பாங்காக்கில் கார்கள் , பைக்குகளில் திரண்ட எதிர்ப்பாளர்கள் ஹாரன் அடித்தும், ஹங்கர் கேம்ஸ் திரைப்பட பாணியில் மூன்று விரல்களில் சல்யூட் அடித்தும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்ட போதும் எதிர்ப்பாளர்களின் வாகனங்கள் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here